Latest News

September 15, 2015

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மாபெரும் போரணி
by admin - 0

தமிழீழ தாயகம், தமிழகம், புலம் பெயர்ந்து வாழும் தேசங்கள் ஆகிய அனைத்து இடங்களை சேர்ந்த தமிழ் மக்களும் ஒன்றாக ஓரணியில் ஒருமித்த குரலில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமிழ் மக்கள் மீது திணிக்க திட்டமிட்டிருக்கும் உள்ளக விசாரணையை கண்டித்து அனைத்துலக விசாரணையைவலியுறுத்தி இனப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை மூலம் நீதி வேண்டி இந்த மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது
 
இடம்: 360 University Avenue (In front of U.S Consulate):
திகதிSeptember 21 - திங்கள் கிழமை
நேரம்மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரை
 
இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலை அரங்கேறி 6 ஆண்டுகளாகியும் எம் ஈழ மண்ணில் நடந்தது ஒரு கொடிய இனப்படுகொலை என சொல்லமுன்வராத சர்வதேசத்திடம் நீதி வேண்டி உலகத் தமிழினம் உலகெங்கும் இருந்தும் குரல் கொடுத்து போராடி வரும் காலகட்டத்தில் நாவின் முன்பாக எதிர்வரும்செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் ஐரோப்பா வாழ் தமிழ் உறவுகளும் மற்றும் உலகின் பல பாகங்களில் இருக்கும் உறவுகளும் ஜெனீவாவில் நாமுன்றலில்முருகதாசன் திடல் நோக்கி பேரணியாக அணி திரள இருக்கும் எழுச்சிக் நிகழ்வுக்கு வலுச் சேர்க்கும் முகமாக கனடா வாழ் தமிழ் மக்களும் சம காலத்தில் அதேநாளில் ரொறொன்ரோவில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நீதி வேண்டி மாபெரும் அணியாக திரண்டு எழுந்து போராட உள்ளார்கள்
 
இந்த பேரணியில் கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் கனடியத் தமிழர் சமூகம் மாணவர் சமூகமுமாக அணி திரண்டு இணைந்து கொண்டு நீதியை வேண்டிபோராட அணி திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.
 
மேலதிக தொடர்புகளுக்குகனடியத் தமிழர் தேசிய அவை  NCCT
தொலை பேசி:416.830.7703 | மின்னஞ்சல்info@ncctcanada.ca | முகநூல் @ncctonline
« PREV
NEXT »

No comments