சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டிருந்த விசாரணை அறிக்கை தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ள சட்டவாளர் குழுவொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமதித்துள்ளது.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது அதக்கு ஒத்த அனைத்துலக நீதிவிசாரணை மன்றத்திலோ சிறிலங்காவை ஐ.நா பாரப்படுத்த வேண்டுமென மில்லியன் கையெழுத்து இயக்கம் ஊடாகவும், அரசவை தீர்மானம் ஊடாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில் சிறிலங்கா விவாகரத்தில் கலப்பு சிறப்பு நீதிமன்றமொன்றினை அமைக்க ஐ.நா ஆiணாயாளர் பரிந்துரைத்துள்ள நிலையில், சட்டவாளர் குழுவொன்றினை நியமித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இது தொடர்பிலான நிலைப்பாட்டினை ஓரிரு நாட்களில் முறையாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கும், அங்கத்துவ நாடுகளுக்கும் தெரியப்படுத்தப்படும் என நா.அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஜெனீவாவில் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment