Latest News

September 13, 2015

முதல் கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற கையோடு ஓய்வு அறிவித்த பெனட்டா!
by Unknown - 0

அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய கையோடு ஓய்வு அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் பிளாவியா பெனட்டா.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இதன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 23ம் நிலை வீராங்கனையான பிளாவியா பெனட்டா (இத்தாலி)– ராபர்ட்டோ வின்சி (இத்தாலி) மோதினார்கள்.

இதில் பெனட்டா 7–6 (7–4), 6–2 என்ற நேர் செட் கணக்கில் வின்சியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

பெனட்டாவுக்கு தற்போது 33 வயதாகிறது. இதன் மூலம் உலகிலேயே அதிக வயதில் மகளிர் ஒற்றையர் கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

மேலும், பெனட்டா தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற முதல் கிராண்ட்சிலாம் பட்டமும் இதுதான்.

இந்நிலையில் தான் டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்து அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கிராண்ட்சிலாம் பட்டம் வெல்ல வேண்டும் என்ற எனது ஒரே கனவு நிறைவேறிவிட்டது.

இந்த மகிழ்ச்சியாக தருணத்துடன் டென்னிசில் இருந்து நான் விடை பெறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments