ஈழத்தமிழ் தேசத்தின் விடிவிற்காய் ஐந்தம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை ஈகம் செய்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 28வது நினைவு தினமும், கேணல் சங்கர் அவர்களின் நினைவுதினமும் உணர்வு பூர்வமாக இன்று(27.09.2015)
லண்டனில் நினைவு கூறப்பட்டது.
இன்று மாலை மில்டன் கீன்ஸ் என்னும் இடத்தில் கூடிய தமிழீழ உணர்வாளர்கள் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நிழற்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி தீபமேற்றி மரியாதை செலுத்தினர் .
இந்த வீரவணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
No comments
Post a Comment