சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரைக்குமான நடைபயணத்தை எதிர்வரும் வியாழக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளோம்.
அதற்கு கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி நீதி கோரிய அந்த நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
No comments
Post a Comment