Latest News

September 15, 2015

சிறுமியின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட வேண்டாம்!
by Unknown - 0

கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) அறிவித்துள்ளது.

கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை (12) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சிறுமியின் உடைகள் கலைந்த நிலையில் வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்திலிருந்தே மீட்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் நடந்த வேளை, வீட்டில் சிறுமியின் பெற்றோர், சகோதரன், தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் இருந்த நிலையில் வீட்டின் ஜன்னலின் ஊடாக சிறுமி கடத்திச்செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார், சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், பிரேதபரிசோதனைகளிலிருந்து சிறுமி பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு, கழுத்துநெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி பிறந்த குறித்த சிறுமியின் 5ஆவது பிறந்த தினம், நாளை என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments