தமிழ்நாடு, புதுச்சேரியில் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தை பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக உள்ளூர் விசாரணையே போதும் என்று, ஐ.நாவில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி காந்தி வீதியில் அமெரிக்காவின் கெஎஃப்சி உணவகத்தில் இன்று பெரியார் சிந்தனை கழகத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே புகுந்து, அங்கிருந்த கண்ணாடிகள், கதவுகள், கம்ப்யூட்டர், மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்தனர்.
மேலும் அங்கிருந்த மீன் கழிவுகளை உணவகம் மீது கொட்டினர். பின்னர், அமெரிக்காவுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த புதுச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
No comments
Post a Comment