Latest News

September 16, 2015

பண்ணையில் அமைந்துள்ள மாவட்ட நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
by admin - 0

கடற்தொழில் நீரியியல் வளத் திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற கடற்தொழில் உபகரணங்கள் வழங்கப்படாததனைக் கண்டித்து யாழ் பண்ணையில் அமைந்துள்ள மாவட்ட நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்பாக நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 நேற்று  செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மேற்படி நீரியில் திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் மதியம் 12. மணி வரை நடைபெற்றது. இதன் போது நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் மீது சரமாரியாகக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திய மீனவர்கள் தமக்கான கடற்தொழில் உபகரணங்களைப் பெற்று கொடுப்பதற்கு அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மகஐரொன்றையும் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் கையளித்தனர். இதன் பிரதிகள் முதலமைச்சர் மற்றும்  மீன்பிடி அமைச்சர் , அரசாங்க அதிபர் மற்றும்  மீனவ அமைப்புக்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த மகஐரில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..

நெடுந்தீவுப் பிரதேசமானது யாழ் குடாநாட்டிலிருந்து கடலால் பிரிக்கப்பட்டு பல்வேறு நிலைகளிலும் பின்தங்கிய நிலைமைக்கு உட்பட்டிருக்கின்ற பிரதேசமாகும். இங்குள்ள பெரும்பாலானவர்கள் கடற்தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டு அதனையே நம்பியிருக்கின்றனர்.

இந் நிலையில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைகளினால் எமது கடல் வளமானது முற்றாக அழிவடைந்து போயிருக்கின்றது. எனவே எம்மிடம் தற்போதிருக்கின்ற தொழில் உபகரணங்களைகுறிப்பாக மீன்பிடி வலைகளை வைத்துக் கொண்டு தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம்.

இதற்கு காரணம் எமது மீன்பிடி வலைகள் பழமையாகி விட்டன, பயன்படுத்த முடியாமல் உள்ளன, 1990 களில் பயன்படுத்தி வலைகளையே பலர் பயன்படுத்தnp வருகின்றனர். இதனால் போதிய வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் பல மீனவர்கள் வேறு தொழிலிற்குச் செல்லுமு; பரிதாப நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.அதே நேரம் புதிய தொழில் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும் வருமான நிலைமை இடங் கொடுக்கவில்லை.

இதே வேளையில் கடற்தொழில் அமைச்சினால் கடந்த காலப் பகுதியில் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையிலான எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது. ஆயினும் நிறுத்தப்பட்டு எரிபொருளிற்கு மாற்றீhக மானிய அடிப்படையிலான வலைகள் வழங்கப்படுவதாக உறுதி அ ளிக்கப்பட்டது.

இந் நடைடமுறை ஏனைய இடங்களில் சிறப்பாக பேணப்பட்டு வருகன்றது. ஆனால் இன்று ஒரு வருட காலமாகியும் எமக்கான மீன்பிடி வலைகள் வழங்கப்படாமலேயே இருப்பது எமக்கு மனவிpரக்தியையும் விசனத்தையும்  ஏற்படுத்துகின்றது.

இவவாறு பாரம்பரியமாக தொழிலை மேற்கொண்டு வருகின்ற நாம் புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகின்றமை தொடர்பாக பல தடவைகள் பலருக்குமு; தெரியப்படுத்தியிருக்கின்றோம்.

ஆனால் இது வரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையிலையே நாம் போராட்டத்தையும் முன்னெடுத்திருக்கின்றோம். எனவே எமக்கு உறுதியளிக்கப்பட்டதன் அடிப்படையில் மானிய அடிப்படையிலான மீன்பிடி வலைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமு; அந்த மகஐரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



« PREV
NEXT »

No comments