Latest News

September 11, 2015

சர்வதேச விசாரனைக்கு இடமில்லை –ஸ்ரீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!
by Unknown - 0

சிறீலங்காவில்  நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை இடம்பெறாது, மாறாக அதனை விசாரணை செய்ய ஓர் உள்நாட்டு பொறிமுறையே கையாளப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் தமது கடமைகளை பொறுபேற்கும் நிகழ்வின் போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்; ஜனாதிபதியும் பிரதமரும் தன மீது நம்பிக்கை வைத்து இந்த கடமையை ஒப்படைத்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன், தான் நாட்டினதும் மக்களினதும் நன்மையை அடிப்படையாகக கொண்டு இந்த பொறுப்புக்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

தனது அற்பணிப்பை வலியுறுத்திய அவர் ஊழியர்கள், யுத்த வீரர்கள் மற்றும் அவர்களது குடுபத்தினருக்கும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு வெகுமதி அடையாள அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தேசிய அரசின் அங்கத்தவர் ஒருவர் என்ற வகையில் அர்பணிப்புடனும், பொறுப்புடனும் மற்றும் நீதிக்கு உட்பட்ட வகையிலும் பணியாற்றுவேன் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
« PREV
NEXT »

No comments