இந்தோனேசியாவில் ஏற்பட்ட பெரிய காட்டுத்தீயால் ஏற்பட்ட புகைப்பனி மண்டலம் அண்டை நாடுகளான, மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு பரவியிருக்கிறது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் வீதிகளில் கடினமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவேண்டாமென்று சிங்கப்பூர்வாசிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் மரம் செடி கொடிகளை சட்டவிரோதமாக வெட்டி எரிக்கும் நடவடிக்கைகளால் இந்தக் காட்டுத் தீ ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது.
காகித மற்றும் பனை எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளுக்குக் காரணமென்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றன.
இந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை இந்தோனேசியா பயன்படுத்தியிருக்கிறது.
No comments
Post a Comment