சத்துருக்கொண்டான் படுகொலை தினம் இன்று
இராணுவமும்,முஸ்லிம் ஊர்காவல் படை இணைந்து அங்கவீனமான பராயமடையாத சிறுவர்கள், சிறுவர்கள்,பெண்கள்,முதியவர்கள் என ஈவு, இரக்கமின்றி வெட்டியும், எரித்தும் கொன்ற சத்துருக்கொண்டான் படுகொலை தினம் இன்று.

25 வருடங்கள் கடந்தும் 150க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கிடைக்கவில்லை.
முக்கிய சாட்சின் படி குற்றவாளிகளாக இலங்கை இராணுவ அதிகாரிகள் காமினி வர்ணகுல சூரிய, கேரத், மற்றும் விஐய நாயக்க இவர்களுக்கு கட்டளை அதிகாரிகளாக கேணல் பேசி பெர்ணாண்டோ ஆகியோர் இனம்காட்டப்பட்டும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை இல்லை.

சென்ற வருடம் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான ஐனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இடம் பெற்று ஒரு வருடகாலமாக இவற்றுக்கான எந்தவித நடவடிக்கைகளும் இற்றைவரை மேற்கொள்ளவில்லை. இனியும் நடக்க போவதில்லை.
09.09.1990 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இராணுவ சீருடையணிந்தவர்களும் சத்துருக்கொண்டான் முகாமுக்கு வாருங்கள் அங்கே உங்களுக்கு கூட்டம் ஒன்று இருக்கின்றது என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டனர்.

நடக்கமுடியாதவர்களை இராணுவ லொறிகளில் ஏற்றிச்சென்று அங்கு கொண்டு சென்று இவர்களை ஆண்கள் வேறு, பெண்கள் வேறு பிள்ளைகள் வேறாக பிரிக்கப்பட்டனர்.
சிங்கள இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையும் இணைந்தே இந்த கோர தாண்டவம் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இவற்றுக்கெல்லாம் தயாரான நிலையில் அன்று மாலை 7.00 மணியளவில் இவர்கள் வாளினால் வெட்டியும், கத்தியினால் குத்தியும் துப்பாக்கிகளினால் சுடப்பட்ட அப்பாவி பொதுமக்கள் ரயர் போட்டு எரிக்கப்பட்டனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட மக்கள் குழிகளில் தூக்கி வீசப்பட்டனர். அன்று மாலை 8.00 மணியளவில் பெரும் கூக்குரல் சத்தமும் சிறுவர்களின் மரண ஓலசச் சத்தமும் எங்கும் எதிரொலிச்ச வண்ணம் காணப்பட்டது.
இவ்வாறு வெட்டி குழியில் வீசப்பட்ட ஒருவர் அக்குழியில் விழாமல் துரதிஸ்ட வசமாக வெளியில் வீசி எறியப்பட்டார். இவ்வாறு வெட்டு காயங்களுடன் தடுப்பு வேலியருகே வீசப்பட்ட நபர் தவன்று சென்று அருகே இருந்த பற்றைக்குள் ஒழிந்து, மறுநாள் காலை வேளையில் அமெரிக்க மிசன் பாதர் மூலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டபின்னர்.
இதனை அறிந்த சிறிலங்கா இராணுவ உளவாளிகள் வைத்தியசாலையயில் வைத்து அவரை கடத்த முற்பட்டனர். இதனை அறிந்த பாதர் அவரின் பாதுகாப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருடன் காப்பாற்றப்பட்டார்.
இவன் மூலமாக பல தகவல்கள் வெளிவந்தன. பின்னர் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்கள் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு சென்று நடந்த சம்பவத்தை முகாமிற்கு பொறுப்பான இராணுவ அதிகாரியிடம் வினவப்பட்டது.
இதற்கு அவர்கள் கூறிய பதில் இங்கு யாரையும் நாங்கள் கொண்டுவரவுமில்லை. அவ்வாறான சம்பவம் ஏதும் இங்கு இடம்பெறவுமில்லை என்பதே இவர்களின் பதிலாக அமைந்தது.
No comments
Post a Comment