தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கு பகுதி மக்கள் தமது குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி 02.09.2015 (புதன்கிழமை) மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பருத்தித்துறை, சுண்டிக்குளம் மற்றும் கேவில் பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது குறைகளை நிவர்த்தி செய்யுமாறும், அந்த பகுதியில் உள்ள வன ஜீவராசி அலுவலகர்களினால் தமது காணிகள் அபகரிப்பினை நிறுத்துமாறும், வன ஜீவராசி அலுவலகர்களின் அட்டகாசத்தினை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.
வடமராட்சி கிழக்கு பகுதியில் வீதிப்புனரமைப்புச் செய்து தருமாறும், வடமராட்சி பகுதி கடலில் இந்திய மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியினை நிறுத்துமாறும், சுண்டிக்குளத்தில் மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்திய சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
அந்த பகுதியில் உள்ள வன ஜீவராசி அலுவலகர்கள் கேவில் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை செருப்பால், முகத்தில் அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியதுடன், குறித்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அரச அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வடமரட்சி கிழக்கு செயற்பாட்டாளரும் மத்திய குழு உறுப்பினருமான சி.த.காண்டீபன் மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பருத்தித்துறை, சுண்டிக்குளம் மற்றும் கேவில் பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது குறைகளை நிவர்த்தி செய்யுமாறும், அந்த பகுதியில் உள்ள வன ஜீவராசி அலுவலகர்களினால் தமது காணிகள் அபகரிப்பினை நிறுத்துமாறும், வன ஜீவராசி அலுவலகர்களின் அட்டகாசத்தினை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.
அந்த பகுதியில் உள்ள வன ஜீவராசி அலுவலகர்கள் கேவில் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை செருப்பால், முகத்தில் அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியதுடன், குறித்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அரச அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வடமரட்சி கிழக்கு செயற்பாட்டாளரும் மத்திய குழு உறுப்பினருமான சி.த.காண்டீபன் மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
No comments
Post a Comment