Latest News

September 15, 2015

தமிழ்மக்கள் வேண்டி நிற்பது இழைக்கப்பட்ட அநீதிக்கான பரிகாரநீதியே அன்றி இழப்பீடு அல்ல
by admin - 0

தமிழ்மக்கள் வேண்டி நிற்பது இழைக்கப்பட்ட அநீதிக்கான பரிகாரநீதியே அன்றி இழப்பீடு அல்ல என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்காவினாhல் முன்வைக்கப்பட்டுள்ள இழப்பீட்டு முறைமை குறித்து லண்டன் பிபிசி தமிழோசையின் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் பொழுதே இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.

இழப்பீடு என்ற முறைமையானது இழந்த உயிர்களுக்கு நீதியாகாது. இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகார நீதியினையே இப்போது தமிழ்மக்கள் வேண்டி நிற்கின்றார்கள் என்றும் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கைத்தீவின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற போர்குற்றங்கள், இனவழிப்பு, மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை வேண்டும் என்பதே தாயக மக்களதும் புலம்பெயர் மக்களதும் நிலைப்பாடாகவுள்ளது.

புதன்கிழமை வெளிவருகின்ற அறிக்கையின் பரிந்துரையானது, நீதிக்கான அனைத்துலக பொறிமுறையூடாக சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துகின்ற வகையில் அமையும் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்பாகவுள்ளது. புதன்கிழமை வெளியாகின்ற அறிக்கை தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு சபைக்கு தெரிவிப்போம் என தெரிவித்திருந்தார்.
« PREV
NEXT »

No comments