பிரித்தானியா உளவு அமைப்பான MI6 உளவாளி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
MI6 உளவாளியான Gareth Williams லண்டனில் உள்ள ஒரு விடுதியில் கடந்த 2010-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் பூட்டியிருந்த ஒரு பையில் இருந்து மீட்கப்பட்டது.
உளவாளியின் திடீர் மரணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் வெளிவராத நிலையில், தற்போது உளவாளி Gareth மரணத்தில் அமெரிக்க உளவு அமைப்பிற்கு பங்கு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
புலனாய்வு வட்டாரங்கள் இதுகுறித்து தெரிவிக்கையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Bill Clinton குறித்த ரகசிய ஆவணங்களை உளவாளி Gareth கைப்பற்றியிருக்கலாம் எனவும், Clinton குறித்த ஆவணங்கள் திருடப்பட்டதாக வெளியான தகவல்களில் உளவாளி Gareth க்கும் பங்கு உண்டு எனவும் தெரிவிக்கின்றனர்.
உளவாளியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், இந்த வழக்கில் மூன்றாவது நபர் தலையீடு நடந்திருக்க வாய்ப்பு உண்டு என சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
ஆனால் 2013-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த Scotland Yard பொலிசார், உளவாளி Gareth பைக்குள் தாமே பூட்டப்பட்டு இறந்திருக்கலாம் என தெரிவித்திருந்தனர்.
No comments
Post a Comment