சுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழ் மகள் திருமதி தர்சிகா கிருஸ்னானந்தம் அவர்களை தேர்தலில் வெற்றிபெற அனைத்து தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் என பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் செயலாளர் வி .கிருபாகரன் மற்றும் தமிழ்நாட்டு சட்டதரணியும் ஈழ உணர்வாளர் எஸ் .அக்கயக்கண்ணி ஆகியோர் தமிழ் மக்களிடம் உரிமையுடன் அழைப்பு விடுத்துள்ளனர்
அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் தேவை குறித்தும் ஈழத்தின் எதிர்காலம் குறித்தும் தமது கருந்துக்களை பதிவு செய்தனர். சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் தர்சிகாவை வெற்றி பெறவைக்கவேண்டும் எனவும் அதற்கு அனைத்து தமிழ் மக்களும் தமது தார்மீக ஆதாரவை வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். அத்துடன் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது முழு ஆதாரவையும் வழங்குவதுடன் ஏனைய இனமக்களின் ஆதாவையும் பெற முயற்சிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்
No comments
Post a Comment