Latest News

September 02, 2015

சுவிஸ்சர்லாந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஈழத்து மகள் திருமதி தர்சிகா கிருஸ்னாநந்தம் அவர்களின் வெற்றியை உறுதி செய்யுமா தமிழினம்?
by admin - 0

Darshikka Krishnanantham
சுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர் தர்சிகா கிருஸ்னாநந்தம் அவர்களின் விருப்பு வாக்கு எண் நேற்று வெளியகியுள்ளது.  ஐரோப்ப நாடுகளில் 40 வருடங்களுக்கு மேலக புலம்பெயர்த்து வாழ்த்து வரும் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள்  பொருளாதரம் மற்றும் அரச நிறுவனங்களில் முன்னேற்றம் கண்டாலும் அரசியலில் குறிப்பிடதக்க முன்னேற்றம் இன்றித்தான் இன்றுவரை உள்ளனர்.

அரசியலில் பலமடைய பல சந்தர்ப்பங்கள் இருந்தபோது அதனை நழுவவிட்டவர்களாக ஈழத்தமிழர்கள் இன்றுவரை உள்ளனர். இந்நிலையில் தான் உலகத்தின் அதி உச்ச மனிதநேய அமைப்புகளான ஐ நா சபை ,உலக செஞ்சிலுவச்சங்கம் போன்றவற்றையும் மற்றும் உலக நாடுகளில் மனித நேயம் உள்ள நாடுகளின் வாரிசையில் முன்நிலையிலும் உள்ளநாடு சுவிஸசர்லாந்து இன்று தேர்தலை எதிர்நோக்கியுள்ளது

ஈழதமிழர்கள் ஆறுபது ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சுவிஸ்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் இன்றுவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை கூட பெறமுடியவில்லை. இந்த தேர்தலில் தர்சிகா வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் உள்ளது. சுவிஸ் தலைநகர் பேர்ன் அதிகமான தமிழர்கள் வாழும் நகரம்  சில மாதங்களுக்கு முன்னர் தூண் நகராச்சியின் தேர்தல் நடைபெற்றது அந்த நகராட்சியில் மிக குறைவான தமிழ் மக்கள் வாழும் பகுதியாக இருந்தபோது இரண்டயிரத்துக்குமேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற்று தர்சிகா வெற்றிபெற்றர். தற்போது தூண்நகராட்சி பிரதிநியாக உள்ள நிலையில் அவர் அங்கம் வகிக்கும் சொசலிச சனநாயகக் கட்சியின்  பணிப்புக்கு அமைய இம்முறை தேர்தலை எதிர்நோக்கியுள்ளர். தர்சிகா யாழ்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட இவர் நாட்டில் ஏற்பட்ட கடும் யுத்தம் காரணமாக அவரது குடும்பம் புலம்பெயர்ந்தது.

சிறுவயது முதல் தாயக மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட இவர் சுனாமி மற்றும் யுத்தத்தினால் பதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தனது சொந்த நிதியில் உதவிகளை செய்து வந்துள்ளார் .
ஐ நா சபையில் இன அழிப்புக்காக இன்று வரை தனது இனத்துக்காக குரல் கொடுத்தும்வருகிறார்.

தர்சிகா சுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தலில்  பேன்ர் நாகரில் அதிகம் தமிழர்கள் வாழும் பகுதி என்பதினால் இவரை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது. சோசலிச சனநாயககட்சி.

இக் கட்சி புலம்பெயர் மக்களுக்காக நீண்ட காலமாக தொடர்து குரல்கொடுத்துவருகின்றது அக்கட்சியில் போட்டியிடும் தர்சிகா சமவாய்ப்பு சமஉரிமை காலச்சாரம் மற்றும் கல்வி வள ஊக்கிவிப்பு  மனித உரிமை மக்களின் குரலாகவும் ஈழத்தமிழர்களின் குரலாகவும்  சுவிஸ் அரசியலில் கால் பதித்துள்ளார். இந்த நிலையில் ஈழதமிழர்களின் அவலங்களை உலகிற்கு எடுத்து உரைக்க இன்றைய உலக அரசியல் சுழலில் சுவிஸ்பாராளுமன்றத்தில் தமிழர் குரல் ஒளிக்க தர்சிகாவை பயன்பாடுத்த வேண்டிய கடமைப்பாடு தமிழ் மக்களுக்கு உள்ளது

ஐயாயிரத்துக்கு மேற்பட்டதமிழர்கள் பேர்ன் நகரில் வாக்களிக்க தகுதி பெற்று உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக தர்சிகாவுக்கு வாக்கு அளித்தால் அவரது வெற்றி உறுதி செய்யப்படும். ஒருவர் இரு விருப்பு வாக்கு அளிக்கமுடியும்  தர்சிகாவின் விருப்பு வாக்கு இலக்கம்(03115).

இம்முறை தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து  வாக்கு அளிக்கும் சந்தப்பத்தில் தர்சிகாவின் வெற்றி உறுதியாகும் அத்துடன் ஒவ்வோரு சுவிஸ் வாழ் தமிழர்களும் இவருக்காக பரப்புரைகளை வேறு இனமக்களுக்கு தெளிவு பாடுத்துபோது அவர்களின் வாக்கு பலத்துடன் அதிக விருப்புவாக்குகளை பெறும் சந்தப்பம் உள்ளது. இவர் வெற்றி பெற்றால் அது உலகத்தமிழர்களின் வெற்றியாக கருதமுடியும்.

எனவே அவரின் வெற்றி தமிழர்களின் கைகளில் உள்ளது இதனை சரியாக பயன்பாடுத்துமா தமிழினம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உலகதமிழர்கள் அவரின் முகநூல் ஊடக தொடர்பு கொண்டு உங்கள் ஆதாரவு ஆலோசணைகளை மற்றும் வாழ்த்துக்களை (Darshikka krishnanantham )தெரிவிக்கமுடியும்


« PREV
NEXT »

No comments