Latest News

September 06, 2015

ராஜபக்ஷக்கள் 8 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
by admin - 0

அமெரிக்காவிலுள்ள எட்டு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அந்நாட்டு நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிய வருகிறது.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “பொரின் பொலிஸ்” சஞ்சிகை இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பிரஜைகளான பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, துமிந்த மனோஜ் ராஜபக்ச, புஷ்பா ராஜபக்ச, தேஜானி ராஜபக்ச, பிசல்கா ராஜபக்ச, டட்லி ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச ஆகியோருக்கே இந்த நீதிமன்ற அறிவிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கையின் புகழை உயர்த்துவதற்காக இலங்கை மத்திய வங்கி 65 லட்சம் டொலர்களை அதாவது 87 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த பணத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து அமெரிக்கா விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினரை அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக நியமித்திருந்தார். அவர் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக பாரியளவிலான தேயிலை வர்த்தகத்தில் ஈடுபட்டதாக இதற்கு முன்னர் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.

« PREV
NEXT »

No comments