Latest News

September 26, 2015

தியாகி தீபம் திலீபனின் 28 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று-அன்றும்; இன்றும் நல்லூரில்
by admin - 0

அன்றும்; இன்றும் நல்லூரில்

தியாகி தீபம் திலீபனின் 28 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரின் நினைவுகளுடன் இருக்கின்ற உறவுகளை அச்சுறுத்தி நினைவுக் கல்லிற்கும் தூபிகளிற்கும் பாதுகாப்பு போடுகின்ற நிலையிலேயே  புலனாய்வாளர்கள் இருக்கின்றனர்.      

  தியாகி திலீபன் அவர்கள் நல்லூரில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த இடத்தில் 2004 ஆம் ஆண்டு சமாதான காலத்தில் அமைக்கப்பட்ட நினைவுக்கல். ஆனால், இன்று இந்த நினைவுக் கல் இடித்தழிக்கப்பட்டிருக்கின்றது.

தீலிபனின் நினைவு தினமான இன்று அந்த நினைவுக் கற்களிற்கே இன்று பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றது. நல்லூரின் வடக்கு வீதியிலேயே தீலிபனின் நினைவுக் கல் அமைக்கப்பட்டிருந்தது.

ஆயினும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அந்த நினைவுக் கல் அடித்து நொருக்கப்பட்டிருந்தது. இதனைத் தொர்ந்து சில வருடத்தின் பின்னர் நினைவுக் கல்லும் கிளறி எறியப்பட்டு அருகில் போப்பட்டுள்ளது.

அதே போன்று தீலிபனின் நினைவுத் தூபியொன்றும் சமதான காலத்தில் நல்லூரான் பின் வீதியில் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தும் மிண்டும் யுத்தம் ஆர்ப்பிக்கப்பட்ட காலத்தில் அந்தத் தூபியும் இடித்தழிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு இருந்த நினைவுக் கல் மற்றும் நினைவுத் தூபிகள் இடித்தழிக்கப்படுள்ளது. இந் நிலையில் திலீபனின் நினைவு நாளான இன்று இந்த இரண்டிற்கும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக அங்த பிரதேசங்களில் புலனாய்வாரள்கள் நிறுத்தப்பட்டு அந்த வீதியிhல் சென்று வருகின்றவர்கள் கண்காணிக்கப்பட்டும் வாகனங்க இலக்கங்கபள் பதியப்பட்டும் வருகின்றன.

இருந்த போதும் அந்த வீதயிhல் செல்கின்ற பலரும் மாவீரன் தீபனை மனிதில் நிறுத்தி அந்த இடத்தில் இறங்கி நின்றும் சிலர் பார்வையிட்டும் செல்கின்றனர். கற்களயும் தூபிகளையும் இழித்தழித்தாலும் தமிழ் மக்களின் உள்ளங்களிலிருக்கின்ற நினைவுகளை அழிக்கமுடியாது.
« PREV
NEXT »

No comments