Latest News

August 30, 2015

காணாமல் போனோருக்கான அனைத்துலக நாள் - பிரித்தானியா
by Unknown - 0

காணாமல் போனோருக்கான அனைத்துலக நாளை நினைவுகூர்ந்து பிரித்தானியா பிரதமர் அலுவலகம் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்குபடுத்தி இருந்தது.

ஐ.நாவின் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான
அனைத்துலக நாளான ஓகஸ்ற் 30ம் இன்று   இலங்கைத் தீவில் காணாமல் போன தமிழ் உறவுகளுக்கான நீதிகோரு கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன் இக்கவனயீர்ப்பு போராடம் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இடம்பெற்றிருந்தது. இன் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான மக்களும் கலந்துகொண்டிருந்தனர். இன் நிகழ்வின் ஒருகட்டமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கோரிக்கை மனு ஒன்று பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. 

உலக அளவில் இந்நாளையொட்டி பல்வேறு நிகழ்வுகள் பல்வேறு அனைத்துலக அமைப்புகளினாலும் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கைத்தீவின் தமிழர் தாயகப்பகுதிகளிலும் காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகளினது பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை காணால் போனவர்கள் தொடர்பிலான சிறிலங்கா ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்படாது என சிறிலங்கா தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.



















  

        

   

        
  


« PREV
NEXT »

No comments