Latest News

August 10, 2015

எம் தேசம் காத்த மாவீரகளைக் காப்போம், வாருங்கள்..!
by admin - 0

எம் தேசம் காத்த மாவீரகளைக் காப்போம், வாருங்கள்..!

காலம் கரைகின்றது……………..

அதுபோல்………….

எம்மினத்தின் வாழ்வும் நாளை????……….

அனைவரின் வீட்டு மனைகளிலும், பணப்பைகளிலும், வாகனத்திலும் ஏன் நிறுவனங்களிலும் எங்கும் சாமிப்படங்கள், திரைப்பட நடிகர் – நடிகைகளின் படங்களை வைத்தும், தொங்கவிட்டும் அழகுபார்க்கும் உறவுகளின் வாழ்வியலில்……….

எத்தனை பேர்களின் வீடுகளில் மாவீரர் திருவுருவப் படங்கள் – தமிழீழத் தேசியத்தலைவர் – தளபதிகள் போராளிகளின் படங்கள் வைத்துள்ளீர்கள்.

பலர் வைத்துத்தான் உள்ளார்கள் நாம் அறிவோம் – ஓர் சிலர் பயத்தின் காரணங்களாலும் தம் குடியுரிமையை தக்க வைக்கவும் “மனதளவில் இருந்தால் போதும்” எனும் தத்துவம் கூறி இயலாமையினால் இன்று பல முகங்கள் எம்மிடையே இல்லை.

“மனதளவில் இருந்தால் போதும்” இந்த வேண்டாத இந்த வாசகத்தால் நாம் செய்த வரலாற்றுப் பிழைகாளால் ஓர் இனத்தின் விடியலுக்காக பாடுபட்ட எத்தனையோ காவியப் பூருசர்களின் (மாவீரர்களின்) முகங்களை இன்று தேடுகின்றோம்...

கருவில் சுமந்தவள் தேடுகிறாள்...
தோள்மீது சுமந்து தாங்கியவன் தேடுகின்றான்...
தலைவாரி பூச்சூடியவள் தேடுகிறாள்...
நெஞ்சத்தில் சுமந்தவன் தேடுகிறான்...

இப்படியாக……………

அன்னை, தந்தை, அக்கா, அண்ணா, தம்பி, தங்கை, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர்கள் உயிருடன் இன்று இல்லை என்று தெரிந்தும் ஒருமுறையாவது அவர்களின் முகத்தை (படத்தை) காண்போமா என தவிக்கின்றார்கள்.

எம்மினத்திற்காக விதையாக விதைக்கப்பட்டவர்கள் முகங்களை நாம் தேடும்போதும் வருங்கால சந்ததிக்கு நாம் வரலாற்று ஓடத்தில் – படைப்புக்களை, காவியங்களை புகட்டாது இருந்தால் அதுவே நாம் எம் தேசத்திற்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.

இதைத்தான் அன்று தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளரிடம் கூறினார்.

“நாம் இன்று அவர்களின் (மாவீரர்களின்) விபரங்கள் – படங்களை சேர்க்காமல் திரட்டி ஓர் கோவையாக்காமல் இருந்தால் அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் துரோகம்” என……….

ஆயினும் பலர் சில மாவீரர் விபரங்களை படங்களை வைத்து பணமும் – செல்வாக்கும் சம்பாதிக்கின்றார்கள்.

மாவீரர்களின் ஈகத்தில் அவர்களின் வாழ்வியல்………

இதுபோக ஓர் வேலைத்திட்டம் ஆரம்பித்தால்

ஏன்…………?

எதற்கு……….?

பெருந்தொகை செலவிட்டு இப்படி செய்யவேனுமா என வெட்டி விதண்டாவாதம் பேசி தன் ஊதியத்தை விடியலுக்காக செலவிட மறுக்கிறார்கள் (தயவு செய்து யாவருக்கும் அல்ல)

இன்றைய பொழுதில் நடப்பதை விபரித்தேன்………..

ஆயினும் ஓர் ஈழத்தமிழனாய் எம் தகுதிக்கு உட்பட்டு சில தேசம் தழுவிய வேலைப்பாடுகளை எதிர்ப்புகளை மீறி ஆரம்பித்தோம் அதில் மின்னூல் வேலைபாடு செலவினம் அதிகரித்தும் விடுவதாக இல்லை என்றும் தொடரவும் எம் காலத்தில் செப்பனிடும் ஒவ்வொரு விடயமும் வருங்காலத்திற்கு……………

ஆகவே காப்பகத்தில் உள்ள கறுப்பு வெள்ளை மாவீரர் திருவுருவப் படங்களை (Black & White Photos) சிறந்த ஓர் தொழிநூட்ப முறையில் வர்ணப் படங்காளாக (Color Photo) மாற்றும் ஓர் முயற்சியை ஆரம்பிக்கக் எண்ணியுள்ளோம்………………….

அவற்றில் கறுப்பு வெள்ளையாக (Black & White) இருக்கும்………..

பூநகரியில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர் விபரங்கள் (திருவுருவப் படங்கள்) – 474 கறுப்பு வெள்ளை திருவுருவப் படங்கள்.

ஏனைய சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர் விபரங்கள் (திருவுருவப் படங்கள்) – 1,665 கறுப்பு வெள்ளை திருவுருவப் படங்கள்.

வர்ணத்தில் சற்றும் தெளிவில்லாமல் சிதைந்தும் மற்றும் ஏனைய மாவீரர் விபரங்கள் (திருவுருவப் படங்கள்) – 2861 திருவுருவப் படங்கள்.

மொத்தம் 5000 மாவீரர் திருவுருவப் படங்களின் வேலைப்பாடுகளை சற்றும் தொழில்நூட்பம் கூடிய முறையில் வேலைப்பாடுகளை மிக விரைவில் ஆரம்பித்துவிட்டு மீண்டும் தொடர்கின்றோம்.

அ.ம.இசைவழுதி.
தேசக்காற்று நிர்வாகி. - http://thesakkatru.com/
தமிழீழம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
« PREV
NEXT »

No comments