Latest News

August 15, 2015

சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் நியமனத்தில் முரண்பாடு
by Unknown - 0

சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரை அகற்றியமையும், பதில் பொதுசெயலாளர் ஒருவரை நியமித்தமையும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாப்பி;ற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலாளருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் பிடியாணை பெறப்பட்ட போது நீதிமன்றத்தின் விதிகளை புறக்கணித்து செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, சுதந்திர கட்சியின் பொது செயலாளரை அகற்றியமையும், பதில் பொதுசெயலாளரை நியமித்தமையும் ஏற்றுக்கொள்ள முடியாது என டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, கூட்டமைப்பின் பொது செயலாளரை குறித்த யாப்பிற்கிணங்க அகற்றுவதற்கு நிறைவேற்று சபைக்கே அதிகாரம் உள்ளது.

அத்துடன், பதில் செயலாளரை நியமிக்கக் கூடிய அதிகாரமும் நிறைவேற்றுச் சபைக்கே உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments