Latest News

August 29, 2015

மஹிந்த சார்பு உறுப்பினரை பாராளுமன்றம் எடுக்க நடவடிக்கை
by Unknown - 0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்னவை பாராளுமன்றத்துக்குள் அனுமதிக்கச் செய்ய மஹிந்த சார்பு குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த மாவட்டத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய சாமர சம்பத் என்பவருக்கு 2 கோடி ரூபா கொடுத்து ஊவா மாகாண சபையில் முதலமைச்சர்  பதவியையும் வழங்கியே முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்னவை பாராளுமன்றத்துக்கு அனுமதிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

லக்ஷ்மன் செனவிரத்ன ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய ஒருவராவார். இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார்.

இருப்பினும், இவர் மஹிந்த சார்பு குழுவைச் சேர்ந்தவர் என்பதனால், இவருக்கு ஜனாதிபதி முதலமைச்சர் பதவியை வழங்க முன்வர மாட்டார் எனவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
« PREV
NEXT »

No comments