Latest News

August 12, 2015

புலத்திலும் இருக்கின்ற தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டுமென மாவை அழைப்பு
by admin - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்பது தமிழ் மக்களின் பலம். அந்தப் பலத்தைப் பாதுகாத்து எமது தாயகத்தை வளப்படுத்த தயாகத்திலும் புலத்திலும் இருக்கின்ற தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டுமென கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார்.

இத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமையப்போகின்ற அரசியல் பலத்தின் ஊடாகவே மத்தியில் அமைப் போகின்ற அரசுடன் பேசி எமது பிரச்சனைக்கு உருப்படியாகன தீர்வைப் பெற்றுக் கொள்ள முடிமென்றுமு; குறிப்பிட்டார்.

இந் நிலையில் அத்தகைய பலத்தை சிதைப்பதற்கு பல தரப்பினர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் விலைபோகாது வழமை போன்று தங்களது முழுமையான ஆதரவையும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்மென்றும் மாவை சேனாதிராசா கேட்டுக் கொண்டார்.

யுhழ் வணிகர் கழகத்தில் வணிகர் சங்கப் பிரதிநிதிகளை வணிகர் கழகத் தலைவர் ஆர்.nஐயசேகரம் தலைமையில் வணிகர் கழக மாநாட்டு மண்டபத்தில் தமிழ்த் தேசயக் கூட்டமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் போது அங்கு உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...

நடைபறவிருக்கின்ற இத் தேர்தல் மிக முக்கியத்தும் வாய்ந்த தேர்தலாகவே கருதப்படுகின்றது. இத் தேர்தலில் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களிக்க வேண்டும். துமிழ் மக்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் வகையிலும் வாக்கைச் சிதறடிக்கும் நோக்கிலும் திட்டமிட்ட வகையில் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

இதனால் கட்டுக் கதைகளையும் அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் எமது மக்களுக்கு நடந்தவையும் நடக்கின்றவையும் என்ன என்பது தொடர்பில் நன்றாகத் தெரியும். ஆகவே ;தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உறவை சீர்குலைகப்பதற்கு முயல்கின்றவர்களை மக்கள் இணம் கண்டு கொண்டு செயற்பட வேண்டும்.
தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டணை வழங்கப்பட்டு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். 

ஆந்த வகையிலையே சர்வதேச விசாரணையொன்று வர இருக்கின்றது. அந்த விசாரணையூடாக உண்மைகள் கண்டறியப்பட்டு பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். இன்று சர்வதேச ரீதியாக எமக்காக ஆதரவு பெருகி வருகின்றது. அதற்கு பக்க பலமாக மக்களின் ஆணையைப் பெற்று மீண்டும் சர்வதேச ரீதியாக நாம் எமது பிரச்சனைகளை வெளிப்படுத்தி அதற்கமைய தீர்வுகளை பெற்றுக்கொள்ளுவோம்.

புல்வேறு சந்தர்ப்பங்களிலும் பலமிக்க சக்தியாக இருந்த நாம் இன்று அத்தகைய பலத்தை இழந்து ஐனநாயக ரீதியிலான பலத்தை வேண்டி நிற்கின்றோம். ஆத்தகைய பலம் மிக்க சக்தியாக மக்கள் இத் தேர்தலில் எமக்கு ஆணையை வழங்க வேண்டும். ஏனெனில் அடுத்து அமையப் போகும் அரசாங்கம் பலமானதாக அமையாமல் போகலாம்.

ஆகவே அதற்கு எமது ஆதரவும் தேவைப்படலாம். ஆகவே அதற்கு ஆதரவை நாம் வழங்கலாம் ஆனால் அமைச்சுக்களைப் பெற்றுக் கொள்ள மாட்டோம். அவ்வாறு நாம் வழங்கும் ஆதரவுடன் எமது பிரச்சனக்கான தீர்வையும் வலியுறுத்தி சர்வதேச ஆதரவுடன் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

அவ்வாறான நிலையில் இன்று எம் மீது சேறு பூசுவதற்கு சிலர் நினை;னக்கின்றனர். அது தான் அவர்கள் வாக்குக் கேட்பதற்கு பயன்படுத்தும் கொள்கையா அல்லது சோகமா என்று தெரியவில்லை. முக்களிடத்தே தவறான கருத்துக்களை பல வழிகளிலும் கொண்டு செல்லப் பார்க்கின்றனர். ஆனால் மக்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றனர்.

எனவே எமது தேசத்தைக் காப்பாற்றி அதனைக் கட்டியெழுப்புவதற்கு தாயகத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் புலத்திலிருந்க்கின்ற உறவுகளும் எம்க்கான ஆணையை வழங்கி  பலம் மிக்க சக்தியாக கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



« PREV
NEXT »

No comments