Latest News

August 25, 2015

சிரியாவின் 2000 ஆண்டு கோவிலை ஐ.எஸ். வெடிவைத்து தகர்த்தழிப்பு!
by Unknown - 0

சிரியாவின் பல்மைரா நகரில் இருக்கும் பண்டை பால்'மின் கோவிலை இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு தகர்த்து அழித்திருப்பதாக சிரிய அதிகாரிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கோவில் வெடி க்கவைத்து தகர்க்கப்பட்டிருப்பதாக சிரியாவின் தொல்பொருட்களுக்கு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஒரு மாதத் திற்கு முன்னரே குறித்த கோவில் தகர்க்கப்பட்டு விட்டதாக சிரிய உள் நாட்டு யுத்தம் தொடர்பில் கண்காணித்து வரும் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் ஐ. எஸ். வசமான பல்மைரா நகரில் உள்ள யுனெஸ் கோவின் உலக பாரம் பரிய சொத்துகளுக்கு பெரும் ஆபத்து ஏற்பட் டுள்ளது. ஏற்கனவே ஐ. எஸ். குழு ஈராக்கில் இருக்கும் பண்டைய தள ங்களை அழித்துள்ளது.

'இன்று (ஞாயிற்றுக் கிழமை) கோவிலுக்குள் பெருமளவான வெடி பொரு ட்களை நிரப்பி அதனை வெடிக்கச் செய்து பெரிய சேதம் ஏற்படுத்தப்பட்டுள் ளது" என்று சிரிய தொல் பொருட்களுக்கான தலைவர் மாமூன் அப்துல் கரீம் ஏ.எப்.பீ. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

'கோவிலை சூழவிருக்கும் தூண்கள் தரைட்ட மாகி இருப்பதோடு செல்லா (கோவிலின் உட்பாக மும்) அழிந்துள்ளது" என்று அவர் விபரித்துள்ளார்.

எனினும் பல்மைரா நகரில் இருந்து தப்பிவந்த குடியிருப்பாளர்கள் அளித்த தகவலில், சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் குறித்த கோவில் வெடி வைத்து தகர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை பிரிட்டனில் இருந்து இயங்கும் மனித உரிமைக் குழு குறிப்பிட்டுள்ளது.

பல்மைரா பாதுகாக்கப்பட்ட பண்டைய கிரேக்க-ரோமானிய இடிபாடுகளைக் கொண்ட பகுதியாகும். இதில் 2,000 ஆண்டுகளுக்கு முன் னர் கட்டப்பட்ட பால்'மின் கோவில் ரோமானிய காலத்தின் முக்கிய கோவில்களில் ஒன்றாகும். இது மழை மற்றும் புயலுக்கான கடவுளுக்கு கட் டப்பட்ட கோவிலாகும்.

பல்மைராவில் இருந்து களவாடப்பட்ட கலைப் பொருட்களை அழிக்கும் புகைப்படங்களை ஐ.எஸ். கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. பல் மைராவில் வரலாற்று பொக்கி'ங்களை கடந்த நான்கு தசாப்தங்களாக கண்காணித்து வந்த தொல்லியலாளர் ஒருவரை ஐ.எஸ். ஒருவாரத் திற்கு முன்னர் தலை துண்டித்து கொலை செய் தது. அப்துல் கரீம் என்ற 81 வயது தொல்லிய லாளர் பல்மைராவின் ஒருசில வரலாற்று பொக் கி'ங்களை மறைத்து வைத்து அதனை வெளி யிட மறுத்ததாலேயே ஐ.எஸ். அவரை கொலை செய்தது.

தவிர, பல்மைராவுக்கு அருகில் இருக்கும் வர லாற்று முக்கியம்வாய்ந்த இரு அடக்கஸ்தலங் களை தகர்த்து அழித்த ஐ.எஸ். அவை, "பல கட வுள் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படுவதாக" குறிப் பிட்டிருந்தது.

இதில் டட்மூர் என்று அழைக்கப்படும் பல்மைரா வின் நவீன நகர் சிரிய தலைகர் டமஸ்கஸ் மற்றும் கிழக்கு நகரான டால் அல் சூருக்கு இடையில் அமைந்திருக்கும் தீர்க்கமான பகுதி யாகும். பண்டைய பல்மைரா நகர் பாலைவனப் பகுதியில் கட்டியெழுப்பப்பட்டதாகும். இது பண் டைய உலகின் முக்கியமான கலாசார பகுதியாக வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.
« PREV
NEXT »

No comments