Latest News

August 18, 2015

ஞானசாரர் படு தோல்வி!
by Unknown - 0

களுத்துறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை பொதுத்தேர்தலில் களமிறங்கிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தோல்வியைத் தழுவியுள்ளார்.

முழு மாவட்டத்திலும் பொதுஜன பெரமுனவுக்கு 5727  (0.82%) வாக்குகளே கிடைக்கப் பெற்றுள்ளன. இதேநேரம், இம்மாவட்டத்தில் 338801 வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 05 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐ.தே.க. 310234 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 38475 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
« PREV
NEXT »

No comments