Latest News

August 15, 2015

பசிபிக் பெருங்கடலின் சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டரில் 6.6 ஆக பதிவு
by Unknown - 0

பசிபிக் பெருங்கடலின் முக்கிய தீவுகளில் ஒன்றான சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் லடா நகரத்திலிருந்து சுமார் 214 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது. இது தலைநகரான ஹோனியராவில் இருந்து 460 கிலோமீட்டர் மேற்கே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. கடந்த திங்களன்றும், ஹோனியாராவில், ரிக்டர் அளவில் 6.9 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பசிபிக் கடல் பகுதியில், அடிக்கடி நிலநடுக்கமும், எரிமலை வெடிப்பும் ஏற்படும், ரிங் ஆஃப் ஃபையர் எனப்படும் 'தீ வளையம்' என்ற பகுதியில், சாலமன் தீவுகள் அமைந்துள்ளன. 2013 ல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கமும், அதைத் தொடர்ந்து வந்த சுனாமியில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
« PREV
NEXT »

No comments