Latest News

August 28, 2015

காணாமல் போதல் தொடர்பில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன – மனித உரிமை அமைப்புக்கள்
by Unknown - 0

காணாமல் போதல் தொடர்பில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் பல்லாயிரக் கணக்கான காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும் அவற்றில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2009ம் ஆண்டு நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையிலான யுத்தத்தின் போது இவ்வாறு பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச காணாமல் போனோர் தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அனுஸ்டிக்கப்பட உள்ளது.

இந்த தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளது.

1990ம் ஆண்டு முதல் முன்னணி அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்ட போதிலும்,  ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுவதில்லை என தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சிலர் உயர் பதவிகளை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட காலத்திலும் காணாமல் போதல் சம்பவங்கள் நீடித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments