Latest News

August 14, 2015

மீண்டுமொரு இனப்பிரச்சினை உருவாகக் கூடாது! இரா.சம்பந்தன்
by admin - 0

மீண்டுமொரு இனப்பிரச்சினை இந்நாட்டில் உருவாகக்கூடாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை மாவட்டத்தின் இறுதிக்கட்ட பிரச்சாரக் கூட்டம், திருகோணமலை முத்துகுமார சுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,



எமது மக்கள் 90%க்கும் அதிகமாக எமக்கு வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்தால் நாங்கள் 20 ஆசனங்களைக் கைப்பற்றுவோம். அதன் மூலமாக நாம் திருகோணமலை மாவட்டத்தில் 2 ஆசனங்களைப்பெறலாம்.

அத்துடன் வடகிழக்கில் 20 ஆசனங்களைக் கைப்பற்றி பலம்வாய்ந்த கட்சியாக பாராளுமன்றத்தில் செயற்படமுடியும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஏற்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாக இருப்போம். விசேடமாக இன்னும் ஒருமுறை எம் நாட்டில் இனப்பிரச்சினை உருவாகக்கூடாது.

அவ்வாறு ஏதேனும் ஏற்படின் நம் இனம் முற்றாக அளிக்கப்படக்கூடிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

அதனால் மக்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் துரைராஜ சிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலைக்கான வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர்  இதில் பங்கேற்றனர்.
« PREV
NEXT »

No comments