வன்னித்தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வவுனியாவில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் 9 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில், சார்ள்ஸ் நிர்மலநாதன் (மன்னார் மாவட்டம்), றோய் ஜெயக்குமார் (வவுனியா மாவட்டம்), திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா (முல்லைத்தீவு) ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
புளொட் சார்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசனும், ரெலோ சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோருடன் மலையக வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரும் களமிறக்கப்படுகின்றார்.
No comments
Post a Comment