Latest News

July 30, 2015

இனவாதம் ஶ்ரீலங்காவின் மறுபெயர்-சிங்கக்கொடி ஏந்தியவர்கள் ஆர்ப்பாட்டம்
by admin - 0

ஶ்ரீலங்காவில் இனவாதம் மேலானதாக காணப்படுகிறது அதன் உருவமே சிங்கக் கொடி தற்போதையை ஶ்ரீலங்கா தேசிய கொடுயே இனவாத கொடியாக இருக்கிறது அதைவிட சிங்களம் மட்டுமே என்ற கொடி இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.


அண்மையில் சில பகுதிகளில் ஒரு சிலரால் பயன்படுத்தப்பட்டு,  தற்போது பொலிஸ் விசாரணை நடத்தப்படுகின்ற சர்ச்சைக்குரிய சிங்கக் கொடிகளை ஏந்திய சிலர் தற்போது கொழும்பு பிறேபுரூக் பிலேசில் உள்ள எம்.ரீ.வி, எம்.பீ.சி சிரச தலைமையகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக அண்மையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது இந்த கொடி பயன்படுத்தப்பட்டமை குறித்து ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

அதேவேளை  சிங்கள கொடியை சிரச தொலைக்காட்சி அவமதித்தது என்று நேற்று தெரிவித்த பொதுபல சேனா அமைப்பு இன்று ஆர்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சிங்களவர்களின் செயற்பாடுகள் வடக்கு கிழக்கில் வாழும் தமிழீழ மக்களுக்கு புலிக்கொடியின் தேவை உணர்த்தப்படுகிறது .

« PREV
NEXT »

No comments