மின்னொளியில் நடைபெற்ற பரபரப்பான உதைபந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் நவிண்டில் கலைமதி அணியை தோற்கடித்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்திவரும் அணிக்கு 11 பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் நேற்று வியாழக்கிழமை 8-30மணிக்கு நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் வடமராட்சியில் இரு பலம்பொருந்திய அணிகளான நவிண்டில் கலைமதி அணியே எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி பெரும் திரளான ரசிகர்கள் மத்தியில் மோதின மிகவும் விறுவிறுபான நடைபெற்ற ஆட்டத்தில் நவஜீவன்ஸ்அணியின் முன்கள வீரர் அருந்தவராசா உஷானந் தனது அணிக்காக கோல் ஒன்றை பெற்றுகொடுத்து தனது அணியே முன்னிலை படுத்தினர் இறுதிவரை இருஅணியினரும் கோல்கள் போட முயற்சித்தபோது பின்கள வீரர்களினால் அது முறியடிக்கப்பட்டது இறுதியில் 1-0 என்ற கோல்கணக்கில் நவஜீவன்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியாது இப் போட்டியின் ஆட்டநாயகனாக உஷானந் தெரிவுசெய்யப்பட்டார்.


No comments
Post a Comment