Latest News

July 02, 2015

யாழ்மாவட்டத்தில் இரு பலம்பொருந்திய அணிகளான வதிரி டையமன்ஸ் அணியை எதிர்த்து சக்கோட்டை சென் சேவியர் அணி நாளை மோதல்
by admin - 0

மாதகல் புனித தோமையார் தேவலயத்தின் பெரு விழாவையும் புனித  தோமையார் இளைஞர் கழகத்தின் 11 வது ஆண்டு விழாவை முன்னிட்டு யாழ்மாவட்ட ரீதியாக  நடத்துகின்ற உதைபந்தாட்டத் தொடரில் இறுதிப்போட்டிக்கு யாழ்மாவட்டத்தில் இரு பலம்பொருந்திய அணிகளான 
வதிரி டையமன்ஸ் அணியை எதிர்த்து சக்கோட்டை சென் சேவியர் அணி நாளை வெள்ளிக்கிழமை மாலை 4-30 மணிக்கு கழக மைதானத்தில் மோதவுள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக முழங்காவில் பங்குதந்தை ஆனாந்தகுமாரும் கௌரவ விருந்தினராக சுண்டுக்குழி திருமுழுக்கு யோவான் ஆலய பங்குதந்தை கிறிஸ்தோப்பரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


செய்தி எஸ்.செல்வதீபன்

« PREV
NEXT »

No comments