ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை விசேட அறிவித்தல் ஒன்றை விடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன.
இன்று மாலை 5.00 மணிக்கு இந்த விசேட அறித்தலை வெளியிட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நேற்றைய தினம் ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அண்மையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்த போது ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாசகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், அவ்வாறான ஓர் விசேட உரை ஆற்றப்படாது என ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க நேற்றைய தினம் மாலை ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
நாட்டின் அரசியல் சூழ்நிலைமை மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெரும்பாலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்காது சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கட்சியின் தலைமப் பொறுப்பினை துறப்பது தொடர்பிலும் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஆராய்ந்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment