60 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் இருக்கிற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்கான முக்கியமான தேர்தலாகத் தான் நாங்கள் இந்த தேர்தலைப் பார்க்கிறோம். என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்திற்கான வேட்பு மனுவை நேற்று வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு வடக்கு, கிழக்கில் 30 வருட காலமாக நடைபெற்ற போரினால் அரசியல் கைதுகள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் விவகாரம், உட்கட்டமைப்பு வசதிகள் எனப் பெரும் அழிவுகளை ஏற்பட்டுள்ளன. எனவே இவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆதரவை எமக்கு மக்களே எமக்கு வழங்க வேண்டும். என்றார்.
No comments
Post a Comment