Latest News

July 08, 2015

முல்லைப் பெரியார் அணைக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இல்லை: ஜெயலலிதா
by admin - 0

முல்லைப் பெரியார் அணைக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இல்லை என்று ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசாங்கம் இந்திய உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்த அணையின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் இடம்பெறலாம் என்று கடந்த வாரம் தமிழக அரசாங்கம், தேசிய புலனாய்வு அறிக்கையை ஆதாரம் காட்டி சத்தியக்கடதாசி ஒன்றை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
அதில் விடுதலைப்புலிகளின் பெயரையும் புலனாய்வுத்துறை இணைந்திருந்தது. எனினும் இதனை தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.
இந்தநிலையில் நேற்று தமிழக அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், விடுதலைப்புலிகளின் பெயரை அகற்றியுள்ளது.
« PREV
NEXT »

No comments