மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறி மோஷடியில் உண்மையான திருடர்கள் யார் என்பதை தெளிவுபடுத்த தான் தாயர் என முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பிரதமர் மத்திய வங்கியை தனது பொறுப்பில் எடுத்துள்ளார். இது சட்ட விரோதமானது. இதற்கு முன்னர் நிதி அமைச்சின் கீழ்தான் மத்திய வங்கி இயங்கியது.
தன்னுடைய காலத்திலும் கடந்த 8 ஆம் திகதிக்குப் பின்னரும் மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோஷடிகளுக்கு யார் பொறுப்பு என விளக்குவதற்கு தான் பகிரங்க விவாதத்துக்குத் தயார். இதற்கு வருமாறு பிரதமர் ரணிலுக்கு தான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments
Post a Comment