நடிகையும் மதுரா தொகுதி பா.ஜ.க. எம்.பி.யுமான ஹேமமாலினி சென்ற கார் மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெற்றோருடன் வந்த 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானது. இந்த விபத்தில் ஹேமமாலினிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தனது தொகுதியான மதுராவில் இருந்து ஹேமமாலினி பென்ஸ் காரில் ஜெய்ப்பூர் சென்று கொண்டிருந்தார்.
டவ்சா என்ற பகுதி அருகே அதிவேகமாக வந்த ஹேமமாலினியின் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி, எதிரே வந்த ஆல்டோ கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆல்டோ காரில் பெற்றோருடன் வந்த 4 வயது குழந்தை பரிதாபமாக பலியானது. பலத்த காயமடைந்த மற்றொரு குழந்தை மற்றும் பெற்றோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில், நடிகை ஹேமமாலியின் இடது கண் மற்றும் மூக்கு அருகே பலத்த காயமடைந்தது. இதையடுத்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காயமடைந்த பகுதியில் தையல் போடப்பட்டுள்ளது.

No comments
Post a Comment