Latest News

July 09, 2015

தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் யோகி அவர்களின் மனைவி தேர்தலில்போட்டி??
by admin - 0


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர் யோகரட்ணம் யோகி மாஸ்டரின் மனைவி ஜெயவதி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் சுயேச்சைக் குழுவில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவருடன் ஜனநாயக போராளிகள் கட்சிப் பிரமுகர்கள் நடத்திய பேச்சுக்கள் மூலம் இம்முடிவு எட்டப்பட்டு உள்ளது என்று தெரிய வந்து உள்ளது.

யுத்தத்தின் இறுதி நாட்களில் முல்லைத்தீவு வட்டவாகல் பகுதியில் இராணுவத்திடம் சரண் அடைந்த இயக்க பிரமுகர்களில் யோகி மாஸ்டரும் ஒருவர் ஆவார்.

அன்று முதல் இன்று வரை இவர் குறித்து எந்தத் தகவலும் கிடையாது. கணவன் உயிரோடு உள்ளார் என்கிற நம்பிக்கையில் யோகி மாஸ்டரை கண்டு பிடிக்கின்ற போராட்டத்தில் ஜெயவதி தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்.

« PREV
NEXT »

No comments