Latest News

July 16, 2015

புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்
by admin - 0


தமிழ் தேசிய மக்கள் முன்ணனியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் தங்கராசா கண்டீபன் மற்றும் கட்சியின் கோவில் பகுதி செயற்பாட்டளார் செல்வராஜா உதயசிவம் ஆகியோர் மீது இராணுவ புலனாய்வு பிரிவினர் தொடர்சியாக அச்சுறுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இருவரினதும் நாடமட்டங்களை கண்காணித்து வருவதுடன் செயற்பட்டாளார் உதயசிவத்தை அப்பகுதி இராணுவமுகாமிற்கு சில தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு  அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அறியமுடிகின்றது.

குறிந்த இருவரும் வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்றுவரும் தமிழ்விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் தமிழ் தேசிய மக்கள் முன்ணனியின் வேலைதிட்டங்களை அங்கு துனிந்து செயற்படுத்திவருகின்றனர்.

அத்துடன் சிங்கள மீனவர்களின் அக்கிரமிப்பு  சட்டவிரோத மணல் அகழ்வுகளுக்கு எதிராக மக்களை திரட்டி ஆர்பாட்டங்களை மேற்கொண்டு வந்தனார்.

நேற்று முன்தினம் தமிழ் தேசிய மக்கள் முன்ணனியின் கட்சிஅலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

இதன் போது புலனாய்வு பிரிவினரினால் கண்காணிக்கப்பட்டு விசாரானைகள் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


செய்தி எஸ்.செல்வதீபன்




« PREV
NEXT »

No comments