Latest News

July 18, 2015

இளம்பெண்ணை துரத்திய அணிலை கைது செய்த பொலிஸார்!
by Unknown - 0

விசித்திரங்களால் உருவானதே வாழ்க்கை. ஆனால், சில விசித்திரங்கள் நம்மை அதிக வியப்பில் ஆழ்த்துபவை. அப்படி ஒரு உச்சகட்ட விசித்திரம் ஜெர்மனில் நிகழ்ந்துள்ளது.

நேற்று முன்தினம் ஜெர்மன் பொலிஸாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. மறுமுனையில் பதட்டத்துடன் பேசிய இளம்பெண், “ஒரு குட்டி அணில் என்னை விடாமல் துரத்துகிறது. யாராவது உடனே உதவிக்கு வாருங்கள்.” என்றார்.

இத்தனை வருட பொலிஸ் அனுபவத்தில் இப்படி ஒரு அழைப்பு வராததால் குழம்பிய ஜெர்மன் பொலிஸார் உடனடியாக அந்தப் பெண் கூறிய இடத்திற்குச் சென்று அந்த அணிலைக் கைது செய்து, சிறைக்காவலில் வைத்தனர். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்த விசித்திர சம்பவத்தை விவரமாக விளக்கினர்.

அணிலைக் கைது செய்ததன் பின்னர் மருத்துவர்களை வைத்து அந்த அணிலை சோதித்துப் பார்த்துள்ளனர் அப்போதுதான், அந்த அணில் பயங்கர சோர்வுடன் இருப்பது தெரிய வந்தது. இதனால் வருத்தமடைந்த பெண் காவலர் ஒருவர், அந்த அணிலின் சோர்வைப் போக்க தேன் கொடுத்துள்ளார் இந்த காட்சியை மற்றுமொரு காவலர் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

« PREV
NEXT »

No comments