இன்றைய சமகால அரசியல் நிலவரங்களுக்காக இது ஒரு மீள் பதிவு
நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் அனந்தி என்ற பெயரின் செல்வாக்கு அதிகமாகவே இருந்தது. இவரின் துணிச்சல் மிக்க பேச்சுக்கள், முடங்கிக் கிடந்த தமிழர்கள் மத்தியில் ஒரு துணிவைக் கொடுத்தது. இவரின் துணிச்சலின்பால் அதிகமான தமிழர்கள் ஈர்க்கப்பட்டார்கள். அதிகளவிளான ஓட்டுக்களும் இவரின் துணிச்சல் மிக்க பேச்சுக்களுக்காகவே விழுந்தன… இம்முறை கூட்டமைப்பின் அமோக வெற்றிக்கு அனந்தியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
இதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது! பல நெருக்குதல்கள், பல மிரட்டல்கள், கொலை அச்சுறுத்தல்கள் என பல தொல்லைகள் கொடுத்தும்… தனிப் பெண்ணாக நின்று கொலைக்கார இலங்கை அரசங்கத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடினார். இவருக்கு அதிகரித்து வரும் மக்களின் செல்வாக்கைப் பார்த்துத்தான், தமக்கு தோல்வி ஏற்படும் என்ற பயத்தில் இலங்கை அரசங்கமும், அதனுடன் சேர்ந்து இயங்கும் இராணுவப் புலனாய்வினரும் மற்றும் ஒட்டுக் குழுக்களும் இவருக்கு எதிராக பல திருவிளையாடல்களை ஆடிப்பார்த்தனர். இறுதியில் எல்லாம் தோல்வியில் முடியவே…
மானங்கெட்ட அரசும், நக்கிப் பிழைக்கும் ஒட்டுக்குழுக்களும் இதுவரையில் இலங்கையில் எவருமே செய்யத் துணியாத மிகவும் கோழைத்தனமான, மிகவும் கேவலமான ஒரு செயலைச் செய்தார்கள். அந்தச் செயலானது யாழ்ப்பணத்தில் மிகவும் பிரபலமான பத்திரிகையான “உதயன்” பத்திரிகை போன்று ஒரு போலியான பத்திரிக்கையை உருவாக்கி விசேட பதிப்பாக அதில் “அனந்தி அரசுடன் இணைந்து விட்டார்” என்ற தலைப்புச் செய்தியுடன் ஒரு பொய்யான செய்தியை பதிவு செய்து தேர்தல் நடக்கப் போகின்ற அதிகாலையில் யாழ் மக்களிடையே விநியோகித்தார்கள்.
எப்படியாவது அனந்தியை தோற்கடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்த இனவாத அரசின் முகத்திரையைக் கிழித்து ஆனந்தியையும் அவரோடு சேர்ந்த கூட்டமைப்பையும் அமோக வெற்றி பெறச்செய்து “நீங்கள் வேறு, நாங்கள் வேறு” என்றும் “எமக்கான உரிமையை நாமே தேர்ந்தெடுப்போம்” என்றும் தமிழ் மக்கள் அனைவரும் உணர்த்தியுள்ளனர்.
இவ்வாறக நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் அனந்திதான் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்ததுடன். தமிழர்களுக்கெல்லாம் மீண்டும் ஒரு துணிவைக் கொடுத்துள்ளார். ஆகவே அனந்தியின் துணிச்சலைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல்…. இவரை ஈழத்தின் முதல் “இரும்புப் பெண்மணி” என்று அழைப்பதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.
-வல்வை அகலினியன்.
No comments
Post a Comment