சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் அறுபது பேர் ஆட்சிமாற்றத்தின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்ற புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் அனந்தி.
திருகோணமலை கடற்படை முகாமிலும், வவுனியா யோசப் மகாமிலும் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. திருகோணமலையில் தளபதிகள் பாப்பா உள்ளிட்ட நாற்பது தளபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
யோசப் முகாமில் வவுனியா தளபதி லோரன்ஸ் உள்ளிட்ட இருபது தளபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இது மைத்திரி ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர்தான் நடந்துள்ளது.
இதுபற்றிய தகவல் எனக்கு கிடைத்துள்ளது. இதன் உண்மைத்தன்மை பற்றி இன்னும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
சக்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனை தெரிவித்தார்
இந்த தகவலை விவசாயி இணையம் மைத்திரி பதவியேற்ற குறிப்பிட்ட நாட்களிலேயே தெரிவித்திருந்தது அதன் இணைப்பை இங்கே கிளிக் செய்து பாருங்கள்
அத்துடன் அனந்தி சசிதரன் அவர்களுக்கு பாராளுமன்ற ஆசனம் வழங்கக்கூடாது என சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளதாக அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் . அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

சில தினங்களுக்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் க்கு யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இரு ஆனசங்களில் ஒன்றை அனந்திக்கு வழங்க சுரேஸ் பிறேமச்சந்திரன் முன்வந்த போதும் அதனை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வழங்கக்கூடாது என முற்றாக நிராகரித்துவிட்டார். எக்காரணம் கொண்டும் அனந்திக்கு பாராளுமன்ற ஆசனம் வழங்கக்கூடாது என்பதும், அனந்தி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் நிற்கமாட்டா? என்ற கதையும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். அதேநேரம் அவர் தற்பொழுது தமிழரசுக் கட்சியின் அங்கத்துவமாக இருப்பதால் நாங்களும் அவாவுக்கு ஆசனத்தை வழங்க மாட்டோம். நீங்களும் (சுரேஸ்) ஆசனம் வழங்கக்கூடாது என மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளார்.
No comments
Post a Comment