இலங்கை அரசாங்கம் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை மீண்டும் அமைத்துள்ளமைக்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான குழு கவலை தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்களை சட்டத்தின் கீழ் தண்டிக்கவோ, அவர்களுக்கு அபராதம் விதிக்கவோ அதிகாரம் வழங்கும் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசாங்கம் மீண்டும் அமைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அமுலில் இருந்த இந்த ஊடக ஒழுங்குமுறைக் குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் நீக்கியிருந்தார்.
அத்துடன் ஊடங்களில் மீதான கட்டுப்பாடுகளையும் கலைய உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் இலங்கையில் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது போன்ற இலங்கை அரசின் செயற்பாடுகள் சர்வதேச ஊடகவியலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான செய்தி :
இலங்கையில் ஊடக சுதந்திரம் 'மீண்டும் அச்சுறுத்தலில்!
இது தொடர்பான செய்தி :
இலங்கையில் ஊடக சுதந்திரம் 'மீண்டும் அச்சுறுத்தலில்!
No comments
Post a Comment