Latest News

July 09, 2015

சுட்டிக்குளத்தில் சிங்கள குடியேற்றம் -தமிழர்களின் செயற்பாடுகளுக்கு தடை 8 பேர் கைது
by admin - 0

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் தொடரும் அரச அதிகாரிகளின்பழிவாங்கு செயட்பாடுகளினால் யுத்ததினால் பாதிக்கப்பட்டமக்கள் சொல்லோன்ன துயரங்களை அனுபவித்து வருகிறார்கள் ஆயினும் அப்பகுதி மக்கள் இது தொடர்பாக எந்த அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுப்பதுதில்லை என அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
வடமராட்சி கிழக்கு கேவில் கிராமத்தில் இன்று கடல் தொழிலாளர் காரியலயம் அமைக்கசென்ற 8 உறுப்பினர்களை போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வனவள பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்ப்பட்டு பின் நீண்ட நேர விசாரணைகளின் பின். விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக சுண்டிக்குளம் கடல்தொழிலாளர் சங்கச்செயலாளர் செல்வராசா உதயசிவம் தெரிவிக்கையில் எமது சங்க காரியலாயம் அமைக்கும் பணிக்காக எமது காணியில் 8 உறுப்பினர்கள் பணிக்காக சென்ற வேளை அவர்களை வனவள பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதம் தாங்கிய இராணுவத்தின் உதவியுடன் கைது செய்துள்ளனார்.

இச்சம்பவம் தொடர்பாக நிஜயம் கேட்க சென்ற கிராம மக்களையும் என்னையும் இராணுவம் தாக்கமுற்பட்டதுடன் விரட்டியாடத்துள்ளனார்.

 கைது செய்யப்பட்ட அனைவரையும் அவர்களின் காரியலாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர விசராணைகளுக்கு பின் அணைத்து ஆதாரங்களை அவர்களுக்கு சமர்பித்தபின் விடுவித்தனார்.

எமது காணியில் சட்டப்படி அணைத்து விடயங்களையும் செய்து எமது காணியில் காரியாலம் அமைக்க சென்ற உறுப்பினர்களை கைது செய்தது எமது மக்கள் மேல் இனவிரோத பழிவாங்கும் செயற்பாடகவே நாம் கருதுகின்றோம்.

இவ்வாறு தொடர்சியாக பழிவாங்கும் உணர்வுடன் மறைமுகமாக வேலைகள் நடைபெற்றுவருகின்றது அதற்கு எமது தமிழ் அதிகாரிகளும் துணையாக செயற்பாடுகின்றனர்.

இதுபோன்ற பல பிரச்சணைகள் நடைபெற்றுவருகின்ற சூழ்நிலையில் சுண்டிக்குளம் கடல் பரப்பில் தென் இலங்கை மீனவர்கள் இராணுவ உதவியுடன் தங்கி நின்று மீன்பிடித்தொழில்களை மேற்கொண்டுவருகின்றனர்.

 இதனால் எமது மீனவர் பல சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர் இதுதொடர்பாக பலர்தரப்பட்டவர்களின் முறைபாடு செய்யப்பட்டும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை  என அவர் மேலும்தெரிவித்தார். 

குறித்த பிரதேசம் யுத்த காலங்களில் மோசமாக பாதிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டுதான் மீள் குடியற்றம் செய்யப்பட்டது.
இன்னமும் பல நூற்றுகணக்கான குடுப்பங்கள் மீள் குடியேற்றம் செய்யவில்லை எனவும் அப்பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கபடுகின்றது.

செய்தி எஸ்.செல்வதீபன்
« PREV
NEXT »

No comments