எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதிய அரசாங்கம் உருவாக்கப்படும்வரை இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த உள்நாட்டு போர்குற்ற விசாரணை பொறிமுறையை நடைமுறைப்படுத்த காலதாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சா மங்கள சமரவீர இதனை இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எனினும் எதிர்வரும் செப்டம்பர் மாத ஜெனீவா அமர்வுக்கு முன்னர், விசாரணைக்கான குழுவும் அதன் தன்மைகளும் குறித்து இறுதிப்படுத்தப்படும் என்று சமரவீர குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் இலங்கை மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைக்கு தயாராகி வருகிறது.
இது பெரும்பாலும் செப்டெம்பர் ஜெனீவா மாநாட்டுக்கு முன்னர் தயார்ப்படுத்தப்பட்டு விடும்.
ஏற்கனவே போர்க்குற்ற விசாரணைகள் ஜூனில் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் தேர்தல் காரணமாக அது பின்னிழுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் வெகுவிரைவில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பார் என்று மங்கள சமரவீர தெரிவித்தார்.
225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படலாம் என்று கதையும் உலாவுவதாக மங்கள கூறினார்.
No comments
Post a Comment