சட்டவிரோத நாட்டை விட்டு வெளியேறல்களை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கக் கூடாது என இலங்கையிடம், ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையிலிருந்து முறைகேடான வகையில் நாட்டை விட்டு வெளியேறும் நபர்களை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் குடியேற்றக்காரர்களுக்கான மனித உரிமை விசேட பிரதிநிதி François Crépeau தெரிவித்துள்ளார்.
நிர்வாக அடிப்படையிலான குற்றமாகவே இந்தக் குற்றச் செயலைக் கருத வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி நாடு திரும்புவோரை அரசாங்கம் கைது செய்து தடுத்து வைக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பங்கள் சிறுவர்கள் சட்டவிரோத நாட்டை விட்டு வெளியேறல்களுக்காக தடுத்து வைக்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு அமைவான வகையில் இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி கடந்த 2014ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்து பல்வேறு இடங்களுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment