Latest News

June 06, 2015

மைத்திரி அரசும் தமிழர்களை கொல்கிறது - பொறுத்துகொள்ளாத கூட்டமைப்பு போராட அழைப்பு
by admin - 0

கொலையாளிகளை கண்டுபிடிக்க தவறிய அரசு - போராட்டத்துக்கு தயாராகும் கூட்டமைப்பு!

மைத்திரி அரசின் கொலைகளை பொறுத்துகொள்ளாத கூட்டமைப்பு போராட அழைப்பு.
மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இது நல்லாட்சிக்கு அவமானம் என்ற தொனிப்பொருளில் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கள் கிழமை (8) திகதி இந்தப் போராட்டம் நடைபெவுள்ளது. 

சமூக சேவை உத்தியோகத்தரது கொலை மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமின்றி கிழக்கு மாகாணத்திலேயே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

இந்த நிலையில் கொலையாளிகளை அண்மித்தும் அவர்களை கைது செய்யவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து உடனடியாக தண்டனை வழங்குமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

கொலை எச்சரிக்கை, அச்சுறுத்தல் என்பவற்றை நிறுத்தும் முகமாகவும் கொல்லப்பட்ட மதிதயானுக்கு நீதி வேண்டும் முகமாகவும் அனைவரையும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

« PREV
NEXT »

No comments