Latest News

June 08, 2015

நியூசிலாந்து நோக்கி சென்ற ஈழத்தமிழ் அகதிகளை நடுக்கடலில் மறித்து விட்டு போனஅஸ்திரேலியா கடற்படை
by admin - 0

நியூசிலாந்து நோக்கி சென்ற ஈழத்தமிழ் அகதிகளை நடுக்கடலில் மறித்து விட்டு போன அஸ்திரேலியா கடற்படை 
இதுதொடர்பாக தோழர் தியாகு தெரிவிக்கையில் 



இன்று நடுப்பகல் நேரம் இந்தோனேசியாவிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் ஈழத் தமிழர். 54 தமிழர்களும், 10 வங்கதேசக்காரர்களும் ஒரு மியன்மர்காரரும் அகதிகளாகத் தஞ்சம் கேட்டு நியூசிலாந்து நோக்கிப் படகில் பயணம் செய்து கொண்டிருந்ததாகவும், ஆஸ்திரேலியச் சுங்கத் துறையினரும் கடற்படையினரும் தங்களை வழிமறித்து நடுக்கடலில் விட்டுவிட்டுப் போய் விட்டதாகவும், தாங்கள் உயிர் பிழைத்து இந்தோனேசியாவில் கரை சேர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அவர்கள் விரும்புவது நியூசிலாந்தில் அடைக்கலம். அவர்களுக்கு ஆஸ்திரேலியக் கடற்படையினரும் சுங்கத் துறையினரும் செய்த மோசடியை ஊடகங்கள் வாயிலாக உலகறியச் செய்ய

உங்களால் அவர்களுக்கு எந்த வகையில் உதவ முடிந்தாலும் உதவ வேண்டுகிறேன்.
என்று தெரிவித்துள்ளார் தோழர் தியாகு, 












தொடர்புக்கு
தியாகு, 
ஆசிரியர், தமிழ்த் தேசம். தொலைபேசி: 00918939154752.
சென்னை,
07.06.2015.
« PREV
NEXT »

No comments