Latest News

June 23, 2015

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக அரசியல் சாசன பேரவை நிறுவப்படக்கூடிய சாத்தியமில்லை!
by Unknown - 0

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக அரசியல் சாசன பேரவை நிறு.வப்படக் கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செல்வாக்குள்ள பிரிவொன்றிற்கும் இடையிலான கருத்துவேறுபாடு காரணமாக பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முதல் அரசமைப்பு சபை ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக  இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் சசான பேரவை நிறுவப்படுவதனை தடுக்க மஹிந்த தரப்பு தீவிர முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது
« PREV
NEXT »

No comments