Latest News

June 30, 2015

மைத்திரி - மகிந்த சார்பானவர்கள் ஓரணியில்
by Unknown - 0

சிறிலங்கா சுதந்திர கட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சார்பாக உறுப்பினர்களும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பான உறுப்பினர்களும் ஒரே குழுவாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

அவர்கள் ஏற்கனவே, நேற்று மாலை சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் கலந்துரையாடிய பின்னரே ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.

« PREV
NEXT »

No comments